NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

குடும்பம் எனும் போர்வையில் பஸ்களில் கொள்ளையிடும் கும்பல் – பொலிஸார் எச்சரிக்கை!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

கொழும்பில் குடும்பம் எனும் போர்வையில் பஸ்ஸில் கொள்ளையிடும் கும்பலொன்று குறித்து பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தனது மனைவி மற்றும் மூன்று பிள்ளைகளுடன் பஸ்களில் மாறுவேடத்தில் பயணித்து கொள்ளையடிக்கும் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பெறுமதியான கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் பணப்பைகளை திருடும் குறித்த நபர் 5,200 மில்லிகிராம் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டதாக பிலியந்தலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், 10 இலட்சம் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான 20 கைத்தொலைபேசிகள் திருடப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபரின் உருவம் அடங்கிய சிசிடிவி காட்சிகளை சோதனையிட்ட பொலிஸார் பிலியந்தலை – மிரிஸ்வத்த பிரதேசத்தில் சந்தேகத்திற்கிடமான தோற்றம் கொண்ட ஒருவரை கைது செய்ய நடவடிக்கை எடுத்தனர்.

வாதுவ பொத்துப்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 33 வயதுடைய சந்தேகநபர், மனைவி மற்றும் பிள்ளைகளுடன் பிலியந்தலை பிரதேசத்திற்கு வந்தமை தொடர்பில் தெளிவான தகவல்களை வெளியிட தவறிய நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் அந்த நபர் பாடசாலை மாணவர்கள் மற்றும் பெண்களின் கையடக்கத் தொலைபேசிகள் திருடப்பட்டுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சந்தேகநபரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தெரியவந்த தகவலின்படி, சந்தேகநபரால் திருடப்பட்ட பெறுமதியான கையடக்கத் தொலைபேசிகள் கல்கிசை மற்றும் புறக்கோட்டை மிகக் குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Share:

Related Articles