NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

‘குடு அஞ்சு’வின் காதலி எனக்கூறப்படும் பிரான்ஸ் யுவதி குறித்து தகவல்!

சர்வதேச போதைப்பொருள் வலையமைப்பின் பலம் மிக்கவராகவும் பாதாள உலகக் குழுவின் தலைவரெனவும் கூறப்படும் ரத்மலான குடு அஞ்சு தற்போது பிரான்ஸில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், பிரான்ஸ் பொலிஸார் தொடர்ந்து விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரத்மலான குடு அஞ்சு கடந்த 4ஆம் திகதி பிரான்ஸ் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து, அவர் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், பணமோசடியின் கீழ் சொத்துக்களை இவர் எவ்வாறு பெற்றுக் கொண்டார் என்பது தொடர்பில் பிரான்ஸ் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

பணமோசடி என்பது பிரெஞ்சு சட்டத்தின் கீழ் மிகவும் கடுமையான குற்றமாக கருதப்படுகிறது.

குடு அஞ்சுவின் காதலி எனக் கூறப்படும் அந்நாட்டு யுவதியின் பெயரில் பிரான்ஸில் நவீன உணவகம் ஒன்று கொள்வனவு செய்யப்பட்டு நடத்தப்பட்டு வருவதாகவும் பிரான்ஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Share:

Related Articles