NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

குட் மோர்னிங் சொல்வதற்கு பதிலாக ஜெய் ஹிந்த்…

இந்தியா – அரியானா மாநிலத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளிலும் எதிர்வரும் 15ஆம் திகதி முதல் காலையில் குட் மோர்னிங் சொல்வதற்கு பதிலாக ஜெய் ஹிந்த் என சொல்ல மாணவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும் என கல்வித்துறை சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.

மாணவர்கள் ஜெய்ஹிந்த் என்று சொல்லும் போது தேசப்பற்றும், நாட்டின் மீதான பெருமையை உணர்த்தும் வகையில் இருக்குமெனவும் மாணவர்களிடையே ஒற்றுமை உணர்வைத் தூண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்களுக்கு தேசத்தின் சுதந்திரத்திற்காகப் போராடியவர்களின் தியாகங்கள் பற்றி அறிந்துகொள்ள ஊக்குவிக்க வேண்டும் என்பதோடு, தேசத்தைக் கட்டியெழுப்புவதில் அவர்களின் எதிர்காலப் பங்கை கருத்தில் கொண்டு ஆசிரியர்கள் பாடம் கற்பிக்க வேண்டும் எனவும் குறித்த சுற்றறிக்கையில் அறிவிறுத்தப்பட்டுள்ளது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles