NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

குருநாகல் போதனா வைத்தியசாலை வைத்தியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

குருநாகல் போதனா வைத்தியசாலையில் இன்று (11) காலை 8 மணி முதல் ஒரு நாள் பணிப்பகிஷ்கரிப்பை மேற்கொள்ளவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.


மகப்பேறு வைத்திய நிபுணர் உள்ளிட்ட வைத்தியர்கள் குழுவை தாக்கிய சம்பவத்துடன் தொடர்புடைய நபர் இதுவரை கைது செய்யப்படாத காரணத்தினால் இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், அவசர சிகிச்சை சேவைகள் மாத்திரம் வழங்கப்படுவதுடன் ஏனைய அனைத்து சிகிச்சை சேவைகளும் நிறுத்தப்படும் என குறிப்பிட்டுள்ளார்.

Share:

Related Articles