NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

குருநாகல் – ஹெரலியாவல பகுதியில் தீ விபத்து – 3 தொழிற்சாலைகள் முற்றாக தீக்கிரை!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

குருநாகல் – ஹெரலியாவல பகுதியில் உள்ள மூன்று தொழிற்சாலைகள் தீயினால் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளன.

காலணி தயாரிக்கும் தொழிற்சாலை, ஆடை உற்பத்தி செய்யும் தொழிற்சாலை மற்றும் மரச்சட்டம் தயாரிக்கும் தொழிற்சாலை என்பன தீயில் எரிந்து நாசமாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மரச்சட்ட தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டிருந்த நிலையில் அருகில் இருந்த ஏனைய இரு தொழிற்சாலைகளுக்கும் தீ பரவியதால் மூன்று தொழிற்சாலைகளும் தீக்கிரையானமை முதற்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. எனினும், தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெத்துள்ளனர்.

Share:

Related Articles