NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்ட அருட்தந்தை சிறில் காமினி பெர்னாண்டோ!

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் விசாரிப்பதற்காக அருட்தந்தை சிறில் காமினி பெர்னாண்டோ இன்று குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டிருந்த நிலையில், அவர் வாக்குமூலம் வழங்க குற்றப்புலனாய்வு பிரிவில் முன்னிலையாகியுள்ளார்.

குற்றப் புலனாய்வுத் திணைக்களம் சம்பந்தப்பட்ட அழைப்பாணைக் கடிதத்தில், “ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான சூழ்நிலைகள் உங்களுக்குத் தெரியும் என்று எங்களுக்குத் தகவல் கிடைத்துள்ளதால், அது குறித்து உங்களிடம் விசாரிக்க உத்தேசித்துள்ளோம்” என்று தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share:

Related Articles