NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

கென்யாவில் வெடிக்கும் பாராளுமன்ற போராட்டம் – பலி எண்ணிக்கை 39ஆக உயர்வு!

கென்யாவின் பொருளாதார நிலையைக் கருத்தில் கொண்டு, அந்நாட்டின் அத்தியாவசியப் பொருட்களின் வரியை உயர்த்துவது தொடர்பில் பாராளுமன்றத்தில் நிதி மசோதாவை தாக்கல் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்த அந்நாட்டு மக்கள், கடந்த வாரம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் பாராளுமன்ற வளாகத்துக்குள் நுழைய, மக்களை கட்டுப்படுத்துவதற்காக பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

இதனால் கோபத்துக்குள்ளான போராட்டக்காரர்கள் பாராளுமன்ற கட்டடத்தை தீயிட்டு கொளுத்தினர்.

இந்த சம்பவத்தினால் 27 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டதோடு, குறித்த வரி உயர்வு மசோதாவை திரும்பப் பெறுவதாக அந்நாட்டு ஜனாதிபதி வில்லியம் ரூட்டோ அறிவித்தார்.

இதன்படி தற்போது மனித உரிமைகள் ஆணையம் ஒரு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.

அரசுக்கெதிராக பொதுமக்கள் நடத்திய போராட்டத்தில் மொத்தமாக 39 பேர் உயிரிழந்துள்ளதோடு 361பேர் படுகாயமடைந்துள்ளனர்.

ஜூன் 18ஆம் திகதி முதல் ஜூலை 01ஆம் திகதிக்குள் 39 பேர் உயிரிழந்துள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதுமட்டுமின்றி போராட்டத்தில் ஈடுபட்ட 32 பேரைக் காணவில்லை என்றும், 627 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பதையும் ஆணைக்குழு அறிவித்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது..

Share:

Related Articles