NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

கெப்பித்திக்கொல்லாவ சூரிய மின் உற்பத்தி நிலையம் ஜப்பான் தூதுவரின் பங்கேற்புடன் திறந்து வைப்பு..!

இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் ஹிடேகி (MIZUKOSHI Hideaki) கெப்பித்திக்கொல்லாவயில் இன்று (7) நடைபெற்ற சூரிய மின் உற்பத்தி நிலையத்தின் திறப்பு விழாவில் கலந்துகொண்டார்.

கூட்டு கடன் வழங்கும் பொறிமுறையின் (Joint Crediting Mechanism, JCM) முதல் திட்டமான இந்த நிகழ்வில் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் செயலாளர் கலாநிதி சுலக்ஷன ஜயவர்தன, ஷிபாட்டா கோர்ப்பரேஷன் நிறுவனத்தின் தலைவர் ஷிபாட்டா தட்சுஹிரோ மற்றும் விண்ட்ஃபோர்ஸ் பிஎல்சியின் முகாமைத்துவப் பணிப்பாளர் மஞ்சுல பெரேரா ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதன்போது ஜப்பான் தூதுவர் மிசுகொஷி MIZUKOSHI தனது உரையில்,

ஜப்பானுக்கும் இலங்கைக்கும் இடையிலான இருதரப்பு ஒத்துழைப்பில் கெப்பித்திக்கொல்லாவ சூரிய மின் நிலையத்தின் முக்கியத்துவத்தை ஒரு பெரிய சாதனையாக எடுத்துரைத்தார்.

இலங்கையில் ஜே.சி.எம். திட்டத்தின் கீழ் முதல் திட்டமான சூரிய மின் உற்பத்தி நிலையம், புதுப்பிக்கத்தக்க ஆற்றலை முன்னேற்றுவதில் ஒரு முக்கிய இடத்தை பிரதிபலிக்கிறது.

மேலும், நிலையான அபிவிருத்திக்கான இரு நாடுகளின் அர்ப்பணிப்பையும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

ஒக்டோபர் 2022இல் ஒத்துழைப்பு ஒப்பந்தத்தின் மூலம் நிறுவப்பட்ட JCM பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தைக் குறைக்கும் மற்றும் குறைந்த கார்பன் தொழில்நுட்பங்களை ஊக்குவிக்கும் திட்டங்களை ஆதரிக்கிறது.

ஷிபாடா கோர்ப்பரேஷன் மற்றும் விண்ட்ஃபோர்ஸ் பிஎல்சி இந்த சூரிய மின் நிலையத்தை வெற்றிகரமாக முடித்திருப்பது, JCM கட்டமைப்பின் அர்ப்பணிப்பையும் எடுத்துக்காட்டுகிறது.

இந்த ஆலை சுத்தமான, நிலையான ஆற்றலை வழங்கும் புதைபடிவ எரிபொருட்களைச் சார்ந்திருப்பதைக் குறைக்கும்.

அத்துடன், இலங்கையின் ஆற்றல் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் நோக்கங்களுக்கு பங்களிப்பதுடன் பெண்கள் உட்பட உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்குவதன் மூலம் சமூக வளர்ச்சிக்கும் துணைபுரியும்.

JCM சுற்றுச்சூழல் சவால்களை நிவர்த்தி செய்வது மட்டுமல்லாமல் இலங்கையில் ஜப்பானிய முதலீட்டை ஊக்குவிப்பதிலும் முக்கிய பங்கை வகிக்கிறது. மேம்பட்ட தொழில்நுட்பங்கள் மற்றும் நிபுணத்துவத்தின் பரிமாற்றத்தை எளிதாக்குவதன் மூலம் JCM பொருளாதார உறவுகளை வலுப்படுத்துகிறது மற்றும் பரஸ்பர வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. இந்த திட்டம் எதிர்கால ஒத்துழைப்புகளுக்கு ஒரு முன்மாதிரியாக செயல்படுகிறது.

நிலையான முன்முயற்சிகள் சுற்றுச்சூழல் மற்றும் பொருளாதார நன்மைகளை எவ்வாறு இயக்க முடியும் என்பதையும் நிரூபிக்கிறது.

JCMஇன் முக்கியத்துவத்தை மீண்டும் வலியுறுத்திய தூதுவர் மிசுகொஷி MIZUKOSHI, யென் கடன் திட்டங்களின் மூலம் மின்சாரத் துறையில் ஜப்பானின் தொடர்ச்சியான ஆதரவையும் குறிப்பிட்டார்.

இந்த திட்டங்கள் CO2 உமிழ்வைக் குறைப்பதற்கும் இலங்கையின் மின்சார விநியோக அமைப்பின் செயல்திறனை மேம்படுத்துவதற்கும் ஜப்பானின் குறைந்த இழப்பு பரிமாற்ற தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகின்றன.

ஜூலை 24ஆம் திகதி யென் கடன்களை மீள ஆரம்பிப்பதற்கான தீர்மானமானது இலங்கையின் எரிசக்தி உட்கட்டமைப்புக்கு ஆதரவளிப்பதற்கான ஜப்பானின் அர்ப்பணிப்பை மேலும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

இந்த திட்டத்தில் ஈடுபட்டுள்ள அனைத்து தரப்பினருக்கும் இலங்கையில் உள்ள ஜப்பான் தூதரகம் தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறது.

இந்தச் சாதனையானது JCMஇன் கீழ் மேலும் கூட்டு முயற்சிகளுக்கு ஒரு நம்பிக்கைக்குரிய ஆரம்பத்தைக் குறிக்கிறது. இலங்கையை அதன் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி இலக்குகளில் ஆதரிப்பதன் மூலம் பசுமையான எதிர்காலத்தையும் ஊக்குவிக்கிறது எனவும் தெரிவித்துள்ளார்.

Share:

Related Articles