NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

கெய்மி புயலால் சீனாவில் கனமழை – 6 இலட்சம் பேர் பாதிப்பு..!

கெய்மி புயலால் கிழக்குச் சீனாவில் கிட்டத்தட்ட 300,000 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெய்ர்ந்துள்ளதுடன், 600,000 இலட்சம் மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, சீனாவின் கிழக்குப் பகுதி முழுவதிலும்; போக்குவரத்து தற்காலிகமாக இடைநிறுத்திi வைக்கப்பட்டுள்ளது.

கெய்மி புயலால் தைவானில் பெய்த கனமழைக் காரணமாக அங்கு 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலையில் கெய்மி புயல் சீனா உள்ளிட்ட அண்டை நாடுகளிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், சீனாவின் புஜியான் மாகாணத்தில் 118 கிலோ மீட்டர் வேகத்தில் புயல் கரையை கடந்துள்ளது.

இதனால் பல நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன், சுமார் 6 இலட்சம் பேரின் இயல்பு வாழ்க்கையும் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது

எனவே வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதியில் வசிக்கும் மக்களை மீட்பு படையினர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றி வருவதுடன், இதற்காக அங்கு பல தற்காலிக நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share:

Related Articles