NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

கைகலப்பு கத்திக்குத்தில் முடிந்தது!

ஹாலி எல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஹவத்தேகம புகையிரத பாதைக்கு அருகில் இன்று சகோதரர்கள் இருவருக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பாக மாறியதில் ஒருவர் கத்தி குத்துக்கு இலக்காகி பலத்த காயமடைந்ததுள்ளதாக ஹாலிஎல பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்த நபர் பதுளை பொது வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

காயமடைந்த நபர் பதுளை அமுனுவெல்பிட்டிய பகுதியை சேர்ந்த 46 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகின்றது.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு சகோதரர்களுக்கு இடையே ஏற்பட்ட காணி தகராறினால் எற்பட்ட வாக்குவாதமே கத்தி குத்தில் முடிவடைந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபராக காயமடைந்த நபரின் சகோதரரான 43 வயதுடைய நபர் ஹாலிஎல பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலதிக விசாரணைகளை மேற்கொண்டதன் பின்னர் சந்தேக நபரை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக ஹாலிஎல பொலிஸார் தெரிவித்தனர்.

Share:

Related Articles