2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுதராதர உயர்தர பரீட்சை நடைபெறும் பரீட்சை நிலையங்களுக்குள், உதவி அதிபர் உட்பட கண்காணிப்பு ஆசிரியர்களுக்கு கையடக்கத் தொலைபேசிகளை எடுத்துச் செல்லதடை விதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், பரீட்சை மண்டபத்தின் நிலைய அதிகாரி மற்றும் மேலதிக கண்காணிப்பாளர் மாத்திரமே கையடக்கத் தொலைபேசிகளை எடுத்துச் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.