NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

கையடக்க தொலைபேசிகளை கொள்வனவு செய்வோருக்கான அறிவித்தல்!

கையடக்க தொலைபேசிகளை கொள்வனவு செய்யும் குறித்த கையடக்க தொலைபேசிகள் தொலைத் தொடர்புகளை ஒழுங்குப்படுத்தும் ஆணைக்குழுவில் பதிவு செய்யப்பட்டதாக என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும் என ஆணைக்குழுவின் நிலைத்தன்மை பணிப்பாளர் மேனகா பத்திரன தெரிவித்துள்ளார்.

அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள மேனகா பத்திரன, குறுஞ்ச் செய்தியை அனுப்புவதன் மூலம் அதனை உறுதிப்படுத்திக்கொள்ள முடியும் எனக்கூறியுள்ளார்.

IMEI என தட்டச்சு செய்து, இடைவெளி விட்டு, 15 இலக்கங்களை கொண்ட IMEI இலக்கத்தை தட்டச்சு செய்து, 1909 என்ற இலக்கத்திற்கு அனுப்புவதன் மூலம் பதிவு தொடர்பான நிலையை அறிந்துக்கொள்ள முடியும் எனவும் கூறியுள்ளார்.

Share:

Related Articles