NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

கைலாசா இருக்கும் இடம் பற்றிய தகவல்!

கைலாசா இருக்கும் இடம் பற்றிய தகவல்களை வெளியிடவுள்ளதாக நித்தியானந்தா அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார்.

கடந்த 2019ஆம் ஆண்டு இந்தியாவில் இருந்து தப்பிச் சென்று கைலாசா என்ற தனி நாட்டை உருவாக்கி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.

மேலும், கைலாசா நாட்டு ஐக்கியநாடுகள் அங்கீகாரம் வழங்கியுள்ளதாகவும் கூறியிருந்தார்கள். 

நித்தியானந்தா பெயரை எடுத்தாலே சர்ச்சையான செய்திகளே பரவி வருகின்ற நிலையில், கைலாசா இருக்கும் இடத்தை எதிர்வரும் 21ஆம் திகதி அறிவிக்கவுள்ளதாக அவரின் உத்தியோகப்பூர்வ இணையத்தில் வெளியிட்டிருக்கிறார்.

மேலும், எதிர்வரும் 21ஆம் திகதி குருபூர்ணிமா நன்னாளில் கைலாசா இருக்கும் இடம் அறிவிக்கப்படுமெனவும் உங்களை அன்போடு வரவேற்கிறோம் எனவும் ஒரு பதிவும் வெளியிடப்பட்டுள்ளது

Share:

Related Articles