NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

கொக்குதொடுவாயில் மனித எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதிக்கு செல்வராஜா கஜேந்திரன் MP விஜயம்!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

கொக்குதொடுவாயில் மனித எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதிக்கு தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் சென்று பார்வையிட்டுள்ளார்

கொக்குத்தொடுவாய் மத்தியில் குடிநீர் குழாய் பொருத்துவதற்காக நிலத்தை தோண்டிய போது புதைக்கப்பட்டிருந்த மனித எலும்புகளும் ஆண், பெண் போராளிகளின் சீருடைகள் சிலவும் வெளிவந்துள்ளன.

குறித்த பகுதிக்கு இன்று (30) தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் மற்றும் செயற்பாட்டாளர்கள் சென்று நிலைமைகளை பார்வையிட்டனர்.

1984இலிருந்து ஸ்ரீலங்கா இராணுவக் கட்டுப்பாட்டிலிருக்கும் இவ்விடத்தில் மேலும் பலர் புதைக்கப்பட்டிருக்கலாமெனவும் இதுவொரு மனிதப்புதைகுழியாக இருக்கலாமெனவும் தெரிவிக்கப்படுகின்றது.

Share:

Related Articles