NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

கொக்குத்தொடுவாய் விவகாரம் – சர்வதேச உண்மை மற்றும் நீதி செயற்றிட்டத்தின் முழுமையான அறிக்கை!

நிலைமாறு கால நீதி கட்டமைப்பு ஏற்படுத்தப்படும் என இலங்கை அரசாங்கம் நீண்டகாலமாக வாக்குறுதி வழங்கும் நிலையில், இராணுவம் ஈடுபட்டதாக கூறப்படும் மனித உரிமை மீறல் வழக்கொன்றினை அரசாங்கம் எவ்வாறு கையாள்கிறது என்பதற்கான ஒரு பரிசோதனையாகவே கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வுப் பணி மாறியுள்ளதாக சர்வதேச அமைப்பு ஒன்று சுட்டிக்காட்டியுள்ளது.

பல தசாப்த்தங்களாக இராணுவத்தின் கட்டுப்பாட்டுப்பகுதிக்குள் உள்ள ஒரு பாரிய மனிதப் புதைகுழியில் புதைக்கப்பட்டிருந்த பல விடுதலைப் புலிகளின் பெண் போராளிகளது சடலங்கள் எனக் கூறப்படும் எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டதானது இலங்கையிலும் புலம்பெயர் தமிழர்கள் மத்தியிலும் பாரிய கவலைகளை ஏற்படுத்தியுள்ளதாக சர்வதேச உண்மை மற்றும் நீதி செயற்றிட்டம் (ITJP) குறிப்பிட்டுள்ளது.

சர்வதேச உண்மை மற்றும் நீதி செயற்றிட்டம் அண்மையில் வெளியிட்ட பாரிய மனிதப் புதைகுழிகள் தொடர்பான அறிக்கையில் குறிப்பிடப்பட்டது போன்று இலங்கையில் முன்னர் மேற்கொள்ளப்பட்ட அகழ்வுப்பணிகளில் பெரும் பிரச்சினைகள் காணப்பட்டதாக தெரிவித்துள்ளது.

சர்வதேச உண்மை மற்றும் நீதி செயற்றிட்டத்தின் முழுமையான அறிக்கை கீழே 

https://itjpsl.com/assets/TAMIL-FINAL-LTTE-Uniforms-and-dog-tag-numbers.pdf

Share:

Related Articles