NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

கொத்து ரொட்டி பார்சலை 1,900 ரூபாவுக்கு விற்பனை செய்த நபர் கைது!

கொழும்பு – புதுக்கடை பகுதியில் உள்ள வீதியோர உணவகமொன்றில் கொத்து ரொட்டி பார்சல் ஒன்றுக்கு 1,900 ரூபா கோரிய சம்பவம் பதிவு செய்யப்பட்டது.

இந்தச் சம்பவம், தொடர்பான காணொளி சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டு வந்ததுடன், விமர்சனங்களும் முன்வைக்கபட்டன.

அத்துடன், குறித்த உணவாக உரிமையாளர் வெளிநாட்டவரிடம் அநாகரிகமான முறையிலும் நடந்துகொண்டதனை அவதானிக்க முடிந்தது.

இந்த நிலையிலே, வெளிநாட்டவருக்கு அதிக விலையில் உணவு விற்பனை செய்ய முயன்ற உணவாக உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வாழைத்தோட்ட பொலிஸாரினால் குறித்த நபர் நேற்று (16) கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு 12 ஐச் சேர்ந்த 51 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், கைது செய்யப்பட்டுள்ள நபர் இன்று (17) புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

Share:

Related Articles