NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

கொழும்பின் பல பகுதிகளுக்கு 18 மணிநேர நீர்வெட்டு!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

கொழும்பின் பல பகுதிகளுக்கு சனிக்கிழமை (19) காலை 8 மணி முதல் 18 மணிநேரம் நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

கொழும்பு, தெஹிவளை-கல்கிசை, ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டை மற்றும் கடுவெல மாநகர சபைக்குட்பட்ட பகுதிகள், மஹரகம, பொரலஸ்கமுவ மற்றும் கொலன்னாவ நகர சபைக்குட்பட்ட பகுதிகள், இரத்மலானை மற்றும் கட்டுபெத்த. கொட்டிகாவத்தை – முல்லேரியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் சனிக்கிழமை காலை 8 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை (20) அதிகாலை 2 மணி வரை நீர் விநியோகம் தடைப்படும் என நீர்வள சபை தெரிவித்துள்ளது.

அம்பத்தளை நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இலங்கை மின்சார சபையினால் மேற்கொள்ளப்படவுள்ள பராமரிப்பு பணிகள் காரணமாகவே இந்த நீர்வெட்டு இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles