கொழும்பின் சில பகுதிகளில் நாளை 12 மணித்தியால நீர் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
கொழும்பு 12, 13, 14 மற்றும் 15 ஆகிய பகுதிகளுக்கே இவ்வாறு நீர்விநியோகத்தடை அமுல்ப்படுத்தப்படவுள்ளது.
இதன்படி நாளை (16) மாலை 6 மணி முதல் நாளை மறுதினம் (17) காலை 6 மணி வரை நீர்விநியோகத்தடை அமுல்ப்படுத்தப்படவுள்ளது.
பிரதான நீர் விநியோக மார்க்கத்தில் மேற்கொள்ளப்படும் அவசர திருத்தப்பணிகள் காரணமாக இவ்வாறு நீர்விநியோகத்தடை அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.