NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

கொழும்பில் காலாவதியான அழகு சாதன பொருட்களை விற்பனை செய்தவர்கள் கைது !

கொழும்பு 07 இல் உள்ள Odel வணிக வளாகத்தில் இருந்து அகற்றப்பட்ட காலாவதியான அழகுசாதனப் பொருட்கள் மற்றும் குழந்தைகளின் சுகாதாரப் பொருட்களை, விற்பனைக்காக காட்சிப்படுத்தப்பட்டிருந்த அத்துருகிரிய பகுதியில் உள்ள இரண்டு மாடிக் கட்டிடத்திற்கு சீல் வைக்க நுகர்வோர் அதிகார சபை நேற்று நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சோதனையின் போது கண்டெடுக்கப்பட்ட அழகுசாதனப் பொருட்கள் மற்றும் குழந்தைகளின் சுகாதாரப் பொருட்கள் ஆகியவற்றின் பெறுமதி சுமார் 50 இலட்சம் ரூபா எனத் தெரிவிக்கப்பட்டது.

அவை சிறப்பு தள்ளுபடியுடன் விற்பனைக்காக காட்சிப்படுத்தப்பட்டதாக நுகர்வோர் அதிகார சபை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சம்பந்தப்பட்ட நபர், குறித்த துணிக்கடையில் இருந்து பொருட்களை மிகக் குறைந்த விலைக்கு எடுத்துச் சென்று தள்ளுபடி செய்து விற்பனை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாகவும் நுகர்வோர் அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles