NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

கொழும்பில் 16 மணித்தியால நீர் வெட்டு!

அம்பதலை நீர் விநியோகத் தொகுதியில் அத்தியாவசிய பராமரிப்பு வேலைகள் காரணமாக நாளை (24) மாலை 5 மணி முதல் மறுநாள்(25) காலை 9 மணி வரையிலான 16 மணிநேர நீர் விநியோகத் தடை பின்வரும் பகுதிகளில் அமுலாகும் என தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.

கொழும்பு 11, 12, 13, 14 மற்றும் 15 ஆகிய பகுதிகள் நீர் விநியோகத் தடையினால் பாதிக்கப்படும்.

நீரை முன்கூட்டியே சேமித்து வைத்து சிக்கனமாக பயன்படுத்துமாறு தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை கேட்டுக்கொண்டுள்ளது.

இதுபற்றிய மேலதிக விபரங்களுக்கு 1939 என்ற இலக்கத்துடன் தொடர்புகொள்ள முடியும். 

Share:

Related Articles