(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
கொழும்பு – இரத்தினபுரி பிரதான வீதியில் புஸ்ஸல்லா பயிற்சி நிலையத்திற்கு அருகில் தனியார் பஸ் மற்றும் சொகுசு பஸ்ஸுக்கு இடையில் ஏற்பட்ட விபத்தில் 20 பேர் காயமடைந்துள்ளனர்.
இன்று (26) காலை 10 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் 20 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களில் 5 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.