NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

கொழும்பு – கண்டி வீதியில் பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்து- ஒருவர் பலி!



கொழும்பு – கண்டி வீதியில் பட்டாலிய கஜுகம என்ற இடத்தில் இரண்டு பஸ்கள் நேற்றிரவு நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.

இந்த விபத்தில் சாரதி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் பயணிகள் பலர் காயமடைந்துள்ளதாக நிட்டம்புவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

காத்தான்குடியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பஸ் ஒன்றும், ஊழியர் போக்குவரத்து பஸ் ஒன்றுமே இவ்வாறு மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விபத்து காரணமாக ​​தடைப்பட்ட வீதியை சீரமைக்கும் பணியில் தற்போது ஈடுபட்டுள்ளதாகவும் நிட்டம்புவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.



Share:

Related Articles