NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

கொழும்பு தாமரை கோபுரத்தின் பெயரை மாற்ற ஆலோசணை!

கொழும்பு தாமரைக் கோபுரத்தின் பெயரிலிருந்து ‘தாமரை’ என்பதை நீக்கி ‘கொழும்பு கோபுரம்’ என மாற்றுவதற்கு அரசாங்கம் ஆலோசித்து வருவதாக தி சண்டே டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

‘தாமரை’ கோபுரத்திற்கு பொருத்தமான பெயர் இல்லை என்ற கருத்துக்களுக்கு மத்தியில் ‘தாமரை’ என்ற பெயரைக் கைவிடும் திட்டம் ஏற்பட்டுள்ளது.

இது ஏற்கனவே ‘ராஜபக்ஷ கோபுரம்’ என்று அழைக்கப்பட்டு வரும் அதேவேளை, மேலும் இது முன்னாள் அரசாங்கத்தின் கௌரவமான திட்டமாக விமர்சிக்கப்படுகிறது என சண்டே டைம்ஸ் பத்திரிகை செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Share:

Related Articles