12,000 மெற்றிக் டன் அரிசி கொழும்பு துறைமுகத்தில் தரையிறக்கப்படவுள்ளதாக இலங்கை சுங்கம் தெரிவித்துள்ளது.
இலங்கை சுங்கத்தின் பேச்சாளர் ஒருவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
சந்தையில் நிலவும் அரிசி தட்டுப்பாடு காரணமாக அரிசியை இறக்குமதி செய்ய அரசாங்கம் மேற்கொண்ட தீர்மானத்திற்கமைய, தனியார்த் துறையினரால் 75,000 மெற்றிக் டன் அரிசி இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.
அதில் 32,000 மெற்றிக் டன் பச்சை அரிசியும், 43,000 நாடு அரிசியும் அடங்குவதாக இலங்கை சுங்கம் தெரிவித்துள்ளது.