NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையில் நிரம்பி வழியும் சடலங்கள்!

கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் அடையாளம் தெரியாத சடலங்கள் 06 மாதங்களுக்கும் மேலாக வைக்கப்பட்டுள்ளதால் சடலங்களை சேமிப்பதில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் மரண விசாரணை அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

இவற்றில் பெரும்பாலான சடலங்கள் விபத்துக்கள் காரணமாக பொலிஸாரால் ஒப்படைக்கப்பட்டதாக மரண விசாரணை அதிகாரி கூறுகிறார்.

மேலும், உரிமையாளர்கள் முன்வராததால், விசாரணைகளை மேற்கொண்டு சடலங்களை அகற்றுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும், அவற்றை ஒப்படைத்த பொலிஸார் அல்லது அவர்களது உறவினர்களுக்கோ பல தடவைகள் அறிவிக்கப்பட்டதாகவும் அவர் கூறுகிறார்.

இந்நிலையில் உரிமையாளர்கள் முன் வந்து சடலங்களை பொறுப்பேற்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

கொஹுவல, மொரட்டுமுல்ல, கிருலப்பனை, மொரட்டுவ, இங்கிரிய, மஹரகம, மருதானை, பிலியந்தலை, வாதுவ, எகொட உயன ஆகிய பொலிஸ் நிலையங்களால் பெரும்பாலான சடலங்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles