கொழும்பு நகரின் பல இடங்களில் திடீர் நீர்வெட்டு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி புதுக்கடை , பாபர் வீதி ,ஆட்டுப்பட்டித்தெரு, விவேகானந்த மேடு, பழைய சோனகத் தெரு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் நீர்வெட்டு இடம்பெற்றுள்ளது.
ஹெலிஹவுஸ் பார்க் நீர்த்தாங்கியில் குறைந்தளவு நீர் மட்டுமே இருப்பதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதிகளில் வாழும் இஸ்லாமியர்கள் பெருநாள் தினத்தில் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.