கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் இன்று (02) 16,000 புள்ளிகளைக் கடந்தது.
இதன்படி, அனைத்துப் பங்குகளின் விலைச் சுட்டெண் 403.94 புள்ளிகள் அதிகரித்து 16,348.55 புள்ளிகளாகப் பதிவானது.
முந்தைய வர்த்தக தினத்துடன் ஒப்பிடுகையில் இது 2.53% வளர்ச்சியாகும்.
அதன்படி, கொழும்பு பங்குச் சந்தையின் மொத்த புரள்வானது இன்றையதினம் 12.86 பில்லியன் ரூபாவாகப் பதிவானது.