கொழும்பு மாநகர சபையின் பொது சுகாதார திணைக்களத்தின் பொது சுகாதார பரிசோதகர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் இன்றைய தினம் கொழும்பு புறக்கோட்டை நான்காம் குறுக்குத் தெரு பகுதியில் உள்ள உலர் உணவுப் பொருட்கள் கடைகளில் திடீர் பரிசோதனைகளை மேற்கொண்டனர்.
இந்த பரிசோதனையின போது பாவனைக்குப் பயன்படுத்த முடியாத உலர் உணவுப் பொருட்கள் மற்றும் கருவாடுகள் கண்டுபிடிக்கப்பட்டன.
மேலும், மக்களுக்கு தீங்கை ஏற்படுத்தக்கூடிய அவற்றை அழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

