NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

கொழும்பு, பொரளையில் விபத்து – ஒருவர் உயிரிழப்பு..!

கொழும்பு – பொரளை மயானத்துக்கு அருகில் கித்துல்வத்தை வீதியில் காரொன்று மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் ஒருவர் சம்பவ இடத்துலயே உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து இன்று (17) இடம்பெற்றுள்ளது.

நாரஹேன்பிட்டியிலிருந்து கித்துல்வத்தை வீதியை நோக்கி சென்றுகொண்டிருந்த காரே மோட்டார் சைக்கிள் மீது மோதியுள்ளது.

விபத்தில் மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்ற, பொரளை சீவலிபுர பகுதியைச் சேர்ந்த நபரே உயிரிழந்துள்ளார்.

காரில் பயணித்த இருவரில் ஒருவர், விபத்து நேர்ந்தவுடன், காரில் பொருத்தப்பட்டிருந்த கெமராவை அகற்றிவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.

இதனையடுத்து, கார் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொரளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Share:

Related Articles