NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

கொழும்பு – மட்டக்களப்பு புகையிரத சேவைகள் – வழமைக்கு திரும்பியது

கொழும்பு கோட்டைக்கும் மட்டக்களப்புக்கும் இடையிலான புகையிரதச் சேவை இன்று மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளதாக புகையிரதத் திணைக்களம் அறிவித்துள்ளது.

காட்டு யானைகள் கூட்டம் ஒன்று புகையிரதத்தில்; மோதியதால் சேதமடைந்த புகையிரதப் பாதை புனரமைக்கப்பட்டுள்ள நிலையில் இவ்வாறு புகையிரதச் சேவை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மின்னேரிய மற்றும் ஹிங்குரக்கொடைக்கு இடைப்பட்ட ரொட்டவெவ பிரதேசத்தில் நேற்று அதிகாலை இந்த விபத்து இடம்பெற்றிருந்தது.

கொலன்னாவை எண்ணெய் சேமிப்பு முனையத்தில் இருந்து மட்டக்களப்பு நோக்கி எரிபொருளை ஏற்றிச் சென்ற புகையிரத்தில்; காட்டு யானைக் கூட்டம் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இதனால் குறித்த புகையிரத பாதை கடுமையாக சேதமடைந்ததுடன், புகையிரதத்தில் இருந்து இரண்டு எரிபொருள் தாங்கிகள் கவிழ்ந்திருந்தன.

இதேவேளை, குறித்த விபத்தில் இரண்டு காட்டு யானைகளும் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

Share:

Related Articles