கொழும்பு மாவட்டம் கொழும்பு மாநகர சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
கொழும்பு மாநகர சபையில் தேசிய மக்கள் சக்தி அதிக ஆசனங்களை வெற்றி பெற்றுள்ளது.
போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,
தேசிய மக்கள் சக்தி (NPP) – 81,814 வாக்குகள் – 48 உறுப்பினர்கள்
ஐக்கிய மக்கள் சக்தி (SJB) – 58,375 வாக்குகள் – 29 உறுப்பினர்கள்
ஐக்கிய தேசிய கட்சி (UNP) – 26,297 வாக்குகள் – 13 உறுப்பினர்
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) – 9,341 வாக்குகள் – 5 உறுப்பினர்
ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் – (SLMC) – 8,630 வாக்குகள் – 4 உறுப்பினர்.
ஆளுங் கட்சியான தேசிய மக்கள் சக்தியைவிட எதிர்க்கட்சிகளுக்கு அதிகமான ஆசனங்கள் இருப்பதாக எதிர்க்கட்சிகளின் கூட்டணி ஆட்சியை அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதால் ஆளுங் கட்சியால் கொழும்பு மாநகர சபையில் ஆட்சியமைக்க முடியாது என்பதும் குறிப்பிடத்தக்கது.