NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

கொழும்பு ஹோட்டல்களுக்கான கட்டணம் நிர்ணயம் – வர்த்தமானி அறிவித்தல் வெளியானது!

கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட சுற்றுலா விடுதிகள் மற்றும் தங்கும் இடங்களுக்கான குறைந்தபட்ச கட்டணங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி முதல் அமுலாகும் வகையில் விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை விலைகளை அறிவித்துள்ளது.

இதன்படி, ஐந்து நட்சத்திர சுற்றுலா விடுதிகளில் அரை ஒன்றுக்கு 100 அமெரிக்க டொலரும், நான்கு நட்சத்திர சுற்றுலா விடுதிக்கு 75 அமெரிக்க டொலரும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் மூன்று நட்சத்திர சுற்றுலா விடுதிக்கு 50 அமெரிக்க டொலரும், இரண்டு நட்சத்திர சுற்றுலா விடுதிக்கு 35 அமெரிக்க டொலரும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஒரு நட்சத்திர சுற்றுலா விடுதிக்கு 20 அமெரிக்க டொலர் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை விலைகளை அறிவித்துள்ளது.

குறித்த கட்டணம் 24 மணிநேர காலப்பகுதிக்கு மாத்திரம் பொருந்தும் எனவும், பொருட்கள் மற்றும் சேவைகள் அல்லது வழங்கப்படும் வசதிகளுக்காக கட்டணம் உள்ளிட்ட ஏனைய சேவை கட்டணங்கள் உள்ளடக்கப்பட மாட்டாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, சுற்றுலா விடுதிகள் மற்றும் தங்கும் இடங்களில் தங்குபவர்களுக்கான உணவு விலைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதன்படி, ஐந்து நட்சத்திர சுற்றுலா விடுதிகளில் நபர் ஒருவருக்கு காலை உணவிற்காக 15 அமெரிக்க டொலரும், மத்திய உணவிற்காக 15 அமெரிக்க டொலரும், இரவு உணவிற்காக 17 அமெரிக்க டொலரும் அறிவிடப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், நான்கு நட்சத்திர சுற்றுலா விடுதிக்கு காலை உணவிற்காக 9 அமெரிக்க டொலரும், மத்திய உணவிற்காக 14 அமெரிக்க டொலரும், இரவு உணவிற்காக 16 அமெரிக்க டொலரும் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share:

Related Articles