NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

கொவிட் தடுப்பூசியால் அரசுக்கு 1.4 பில்லியன் ரூபா நட்டம்..!

கொவிட் பெருந்தொற்று காலப் பகுதியில் நாட்டுக்கு கொண்டு வரப்பட்ட 75 இலட்சம் பைசர் தடுப்பூசிகள் காலாவதியாகிதால் அரசாங்கத்திற்கு இந்த நட்டம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பைசர் தடுப்பூசிகளினால் அரசாங்கத்திற்கு 1.4 பில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

உரிய முகாமைத்துவம் இன்றி, மித மிஞ்சிய அளவில் தடுப்பூசிகள் கொள்வனவு செய்யப்பட்ட காரணத்தினால் பொதுமக்களின் பணம் விரயமாக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தை மருத்துவ மற்றும் சிவில் உரிமைகள் குறித்த மருத்துவ தொழிற்சங்க கூட்டமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

முன்னாள் சுகாதார இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன பதவி வகித்த காலத்தில் இலவசமாக கிடைக்கப்பெற்ற தடுப்பூசிகளை கவனத்திற்கொள்ளாது பணம் கொடுத்து தடுப்பூசிகள் கொள்வனவு செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், அண்மையில் சுமார் 75 இலட்சம் காலாவதியாகிய பைசர் தடுப்பூசிகள் அழிக்கப்பட்டுள்ளன.

Share:

Related Articles