NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

கோப் குழு கூட்டத்தில் ரஞ்சித் பண்டாரவின் மகன் பங்கேற்றமை குறித்து விசாரணை!

இலங்கை கிரிக்கெட் நிறுவன அதிகாரிள் கோப் குழுவிற்கு அழைக்கப்பட்ட போது போது கோப் தலைவர் பேராசிரியர் ரஞ்சித் பண்டாரவின் மகன் கனிஷ்க பண்டாரவும் குறித்த கூட்டத்தில் பங்கேற்றிருந்தார்.

இந்நிலையில், பேராசிரியர் ரஞ்சித் பண்டாரவின் மகன் கனிஷ்க பண்டார குறித்த கூட்டத்தில் பங்கேற்றமை தொடர்பில் விசாரணை நடத்தப்படும் என சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

குறித்த கூட்டத்தில் பேராசிரியர் ரஞ்சித் பண்டார கைகளால் சைகை காட்டி விசாரணையாளர்களை அச்சுறுத்தியதாக எழுந்துள்ள சர்சையையடுத்து, தற்போது அவரது மகன் கூட்டத்தில் பங்கேற்றமை குறித்தும் தற்போது பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Share:

Related Articles