NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

கோலாகலமாக நிறைவுக்கு வந்த ஆசிய விளையாட்டு போட்டி !

19-வது ஆசிய விளையாட்டு போட்டி கடந்த மாதம் 23 ஆம் திகதி சீனாவின் ஹாங்சோவ் நகரில் தொடங்கியது.

45 நாடுகளை சேர்ந்த 12,407 வீரர், வீராங்கனைகள் 40 வகையான போட்டிகளில் பங்கேற்றனர்.

19-வது ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்க வேட்டையில் சீனாவின் கையே ஓங்கியது.

தொடர்ந்து 11-வது ஆண்டாக சீனா பதக்கப்பட்டியலில் ‘நம்பர் வன்’ இடத்தை ஆக்கிரமித்துள்ளது. கடைசி நாளான நேற்று நீச்சலில் இசைக்கேற்ப நடனம் மற்றும் கராத்தே பந்தயங்கள் மட்டுமே இடம்பெற்றது.

இதைத் தொடர்ந்து இரவில் தாமரைப்பூ வடிவிலான ஹாங்சோவ் ஒலிம்பிக் மைதானத்தில் லேசர் ஒளி வெள்ளத்திற்கு மத்தியில் கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் நிறைவு விழா கோலாகலமாக அரங்கேறியது.

இறுதியாக 2026 ஆம் ஆண்டு ஆசிய விளையாட்டை நடத்தும் ஜப்பானிடம், ஆசிய ஒலிம்பிக் சபையின் கொடியை ஆசிய ஒலிம்பிக் சபையின் இடைக்கால தலைவர் இந்தியாவின் ரனதீர் சிங் வழங்கியதுடன் போட்டி முடித்து வைக்கப்பட்டுள்ளது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles