NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

கோலூன்றிப் பாய்தல் தேசிய போட்டி – யாழ் மாணவி சாதனை!

தியகம மஹிந்த ராஜபக்ஷ விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் 102ஆவது தேசிய மெய்வல்லுநர் சம்பியன்ஷிப்பில் யாழ். மாவட்ட மெய்வல்லுர் சங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் பங்குபற்றிய நேசராசா தக்சிதா புதிய தேசிய சாதனை நிலைநாட்டி வரலாறு படைத்தார்.

கோலூன்றிப் பாய்தலில் 3.72 மீற்றர் உயரத்தைத் தாவியதன் மூலமே தக்சிதா புதிய சாதனையை நிலைநாட்டி தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார்.

இரண்டு வருடங்களுக்கு முன்னர் இராணுவ வீராங்கனை சச்சினி பெரேரா 3.71 மீற்றர் உயரத்தைத் தாவி நிலைநாட்டியிருந்த தேசிய சாதனையையே தக்சிதா இன்று வியாழக்கிழமை (27) முறியடித்தார்.

சாவகச்சேரி இந்து கல்லூரியின் பழைய மாணவியான இவர் தற்போது யாழ். பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பைத் தொடர்கிறார்.

இது இவ்வாறிருக்க, ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் அருந்தவராசா புவிதரன் 5.00 மீற்றர் உயர் தாவி தங்கப் பதக்கத்தை வென்றெடுத்தார்.

Share:

Related Articles