NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

க.பொ.த உயர்தர மாணவர்களுக்கான அறிவித்தல்!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான விஞ்ஞானம் உள்ளிட்ட 40 விடய தானங்களுக்கான மதிப்பீட்டு நடவடிக்கைகள், இன்று (15) முதல் ஆரம்பமாகவுள்ளதாக பிரதி பரீட்சைகள் ஆணையாளர் லசிக்க சமரகோன் தெரிவித்துள்ளார்.

அதற்கிணங்க, நாடளாவிய ரீதியில் 18 நகரங்களிலுள்ள 39 மத்திய நிலையங்களில் பரீட்சைத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கைகள் இடம்பெறவுள்ளது.

இந்நடவடிக்கைகளில் 519 குழுக்கள் செயற்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த மதிப்பீட்டு நடவடிக்கைகளுக்காக 37 அரசாங்க பாடசாலைகளை உபயோகப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறெனினும் அந்தப் பாடசாலைகளை முழுமையாக மூடுவதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படமாட்டாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். மதிப்பீட்டுக்கு உட்படுத்தப்படும் பாடவிதானங்கள் மற்றும் அதற்கான செயற்பாடுகள் இடம்பெறும் நகரம், பாடசாலைகள் தொடர்பான தகவல்கள் பரீட்சைத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share:

Related Articles