(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
இந்தியாவில் BMW நிறுவனத்தின் 2023 ஆம் ஆண்டு X5 facelift கார் தற்போது வெளியாகியுள்ளது.
இதில் பெட்ரோல் மற்றும் டீசல் என இரு என்ஜின் Option’களிலும் கிடைக்கிறது. பிரீமியம் செக்மென்ட் காரான இது மெர்சிடிஸ், ஓடி, வோல்வோ, ரேஞ்சு ரோவர், ஜீப் போன்ற நிறுவனங்களின் நேரடி போட்டியாளராக உள்ளது.
இதன் முன்பக்கம் BMW நிறுவனத்திற்கு உரித்தான அதே கிரில் வசதி உள்ளது. புதிதாக டிசைன் செய்யப்பட்ட முன்பக்க பம்பர் மற்றும் பின்பக்க பம்பர் உள்ளது. இதன் டைல் பகுதியும் புதிதாக டிசைன் செய்யப்பட்டுள்ளது. மேலும் 21 இன்ச் ஸ்டாண்டர்ட் அலாய் வீல், ஸ்லிம் LED Matrix ஹெட் லேம்ப் வசதி உள்ளது.
இதன் X Line ட்ரிம் Satin Aluminium கலர் ரூப் ரைல் மற்றும் M Sport ட்ரிம் ஸ்போர்ட்டி பம்பர், க்ளோஸ் பிளாக் ரூப் ரைல், டார்க் ரியர் பம்பர், புதிய எக்ஸாஸ்ட் டிப் உள்ளது.
காரின் உள்ளே ஒரு பெரிய BMW வைட் கர்வ் டிஸ்பிளே உள்ளது. இதில் 12.3 இன்ச் இன்ஸ்ட்ருமென்ட் கிளஸ்டர் வசதி, 14.9 இன்ச் இன்போடைன்மெண்ட் ஸ்க்ரீன், ஆம்பிஎண்ட் லைட்டிங், எலக்ட்ரிகல் அடஜஸ்ட் மற்றும் ஹீட் வசதியுள்ள சீட், Harman Kardon Sound System, பேனரோமிக் சன் ரூப், லெதர் ஸ்டேரிங் வீல், 4 Zone climate control போன்ற வசதிகள் உள்ளது.
இந்த கார் பெட்ரோல் மற்றும் டீசல் என ஒரு வகைகளிலும் கிடைக்கிறது. கூடுதலாக மைல்டு ஹைபிரிட் 48V எலக்ட்ரிக் மோட்டார் உள்ளது.
xDrive40i (பெட்ரோல்) model காரில் 381 BHP பவர் மற்றும் 520NM டார்க் உள்ள 3.0 லிட்டர் இன்லைன் 6 டர்போ சார்ஜ் என்ஜின் இடம்பெறும். இந்த கார் 100 கிலோமீட்டர் வேகத்தை 5.4 நொடிகளில் அடைந்துவிடும்.