NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

சகல வாகனங்களுக்கான எரிபொருள் ஒதுக்கீடு மேலும் அதிகரிக்கப்படும் – அமைச்சர் கஞ்சன

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

தேவையான மதிப்பீட்டின் பின்னர் அனைத்து வாகனங்களுக்கான வாராந்த எரிபொருள் ஒதுக்கீடு அடுத்த மாதம் மேலும் அதிகரிக்கப்படும் என வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தற்போது பதிவுசெய்யப்பட்ட முச்சக்கரவண்டிகளுக்கு 22 லீற்றர் எரிபொருளும் ஏனைய முச்சக்கரவண்டிகளுக்கு 14 லீற்றர் எரிபொருளும் வழங்கப்படுகிறது.

அதற்கிடையில், மோட்டார் சைக்கிள்களுக்கு 14 லீற்றர் எரிபொருளும் காருக்கு 40 லீற்றர் எரிபொருளும் வழங்கப்படுகிறது.

மேலும், வேன்களுக்கு 40 லீற்றர் எரிபொருளும் பஸ்கள் மற்றும் கனரக வாகனங்களுக்கு 125 லீற்றர் எரிபொருளும் வழங்கப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.

Share:

Related Articles