சட்டவிரோதமாக நாட்டில் தங்கியிருந்த 26 வெளிநாட்டுப் பிரஜைகள் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகளால் இன்று செவ்வாய்க்கிழமை (26) காலை கைது செய்யப்பட்டுள்ளனர்.
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் கொழும்பு, கிருலப்பனை பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதில் 16 பங்களாதேஷ் பிரஜைகள், 02 பாகிஸ்தான் பிரஜைகள், 02 புருண்டி பிரஜைகள், ஓர் இந்திய பிரஜை, ஒரு பிலிப்பைன்ஸ் பிரஜை, ஒரு உகாண்டா பிரஜை, ஒரு எத்தியோப்பியா பிரஜை, ஒரு கென்யா பிரஜை, ஒரு நேபாளம் பிரஜை என 26 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் 23 ஆண்களும் 3 பெண்களும் அடங்குகின்றனர்.
குறித்த சந்தேக நபர்கள் வெலிசர தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் முன்னெடுத்து வருகின்றனர்.