(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
சந்திரயான் – 3 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் தரையிங்கி சாதனை படைத்துள்ளது.
சந்திரயான் 3 விண்கலமானது, கடந்த மாதம் 14ஆம் திகதி ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்ய இந்தியா அனுப்பியது.
முதலில் புவி வட்டப் பாதையைச் சுற்றி வந்தது. பிறகு நிலவுவட்டப் பாதைக்கு மாற்றப்பட்டு, படிப்படியாக அதன் சுற்றுவட்டப்பாதை குறைக்கப்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன்பு உந்து கலனில் இருந்து ‘விக்ரம் லேண்டர்’ கருவி பிரிக்கப்பட்டது.
இந்த ‘லேண்டர்’, இன்று மாலை 6.04 மணிக்கு நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கியது. இந்நிலையில், இந்தியாவுக்கு இன்றைய தினம் வரலாற்றில் பதிவு செய்யப்பட வேண்டிய நாளாக மாறியமை குறிப்பிடத்தக்கது.