(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிகிரி கொப்பெகடுவ தான் பதவி விலகல் செய்வதாக அறிவித்துள்ளார்.
பதவி விலகுவது குறித்த கடிதத்தை அவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு அனுப்பி வைத்துள்ளார்.
எதிர்வரும் 10ஆம் திகதியுடன் தாம் பதவி விலகல் செய்வதாக ஜனாதிபதிக்கு அவர் திகதியிட்டு குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் கடந்த 2019ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 18ஆம் திகதி டிகிரி கொப்பெகடுவ சப்ரகமுவ மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
அண்மையில் மூன்று மாகாணங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமிக்கப்பட்ட நிலையில், டிகிரி கொப்பெகடுவ பதவி விலகுவதாக அறிவித்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.