NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

சப்ரகமுவ மாகாண தமிழ் பாடசாலைகளுக்கும் விடுமுறை!

சப்ரகமுவ மாகாண தமிழ் பாடசாலைகளுக்கும் எதிர்வரும் 13ஆம் திகதி விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சப்ரகமுவ ஆளுநர் நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 12ஆம் திகதி ஞாயிற்றுகிழமை தீபாவளி தினத்தை முன்னிட்டு, அடுத்த நாள் 13ஆம் திகதி விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த விடுமுறை தினத்திற்காக, எதிர்வரும் 18ஆம் திகதி பாடசாலை நடாத்தப்படும் என சப்ரகமுவ ஆளுநர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தோடு ஊவா மற்றும் மத்திய மாகாண தமிழ் பாடசாலைகளுக்கும் 13ஆம் திகதி விடுமுறை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share:

Related Articles