ஸ்கொட்லாந்துக்கு எதிரான ஐசிசி மகளிர் டி20 உலகக் கிண்ண தகுதிச்சுற்று இறுதிப் போட்டியில் வெற்றி பெற்ற இலங்கையின் மகளிர் கிரிக்கெட் அணித்தலைவர் சமரி அத்தப்பத்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார்.
இந்நிலையில், சமரி அத்தப்பத்துவுக்கு இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர் அரவிந்த டி சில்வா தனது வாழ்த்துகளை தெரிவித்திருந்தார்.
ஐசிசி தரவரிசையில் முதலிடத்தை பிடித்தமைக்கு முதலில் நான் எனது வாழ்த்துக்களை தெரிவித்துகொள்கிறேன். சமரி அடைந்துள்ள இலக்கு இலங்கை கிரிக்கெட்டை முன்னோக்கி கொண்டுசெல்ல முக்கியத்துவமானது. எந்தவொரு நாட்டுக்கும் ஒரு விளையாட்டை பிரபலப்படுத்த ஒரு உதாரணகர்த்தாக்கள் வேண்டும்.
இது இலகுவான வெற்றியல்ல. நூற்றாண்டு காலமாக கிரிக்கெட் விளையாடும் நாடுகளுக்கு எதிராக இந்த இலக்கை அடைந்துள்ளார். அதுவும் நம்மை போன்ற சிறிய நாட்டிலிருந்து போய், அவர் அடைந்துள்ள இந்த வெற்றி முக்கியமானது.
ஒரு போட்டியில் 195 ஓட்டங்களை குவித்து தனியாக போட்டியை வெற்றிக்கொள்வது என்பது இலகுவான காரியமல்ல. இது முழு நாடும் ஏற்றுக்கொள்ளும் வெற்றியாகும் எனத் தெரிவித்துள்ளார்.