சமூக வலைத்தளங்கள் ஊடாக வெளிநாட்டு பிரஜைகளுக்கு சிறுவர்களின் நிர்வாண காணொளிகள் மற்றும் புகைப்படங்களை விநியோகம் செய்த இளைஞன் ஒருவன் ராகம பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ராகம, கெந்தலியத்தபாலுவ பிரதேசத்தை சேர்ந்த 20 வயதுடைய இளைஞன் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சிறுவர்களின் நிர்வாண காணொளிகள் மற்றும் புகைப்படங்களை முகநூல் ஊடாக வெளிநாட்டு பிரஜைகளுக்கு விநியோகம் செய்யப்படுவதாக சிறுவர் மற்றும் பெண்கள் பாதுகாப்பு பணியகத்திற்கு தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் புதுக்கடை நீதவான் நீதிமன்றில் உண்மைகளை அறிவிக்கப்பட்டதையடுத்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும், சந்தேக நபரிடமிருந்த கையடக்கத் தொலைபேசி மற்றும் சிறுவர்களின் நிர்வாண காணொளிகள் மற்றும் புகைப்படங்கள் அடங்கிய கணினி ஒன்றும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.