பாகிஸ்தானில் நடைபெறவுள்ள ICC சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் 08 நாடுகளும் தங்களது அணிகளை எதிர்வரும் 12ஆம் திகதிக்குள் அறிவிக்க வேண்டுமென ICC உத்தரவிட்டுள்ளது.
08 அணிகள் பங்கேற்கும் சம்பியன்ஸ் கிண்ணத் தொடர் பெப்ரவரி 19ஆம் திகதிமுதல் மார்ச் 09ஆம் திகதிவரை பாகிஸ்தானில் நடைபெறுகிறது. இருப்பினும், இந்திய அணி தனது போட்டிகளை டுபாயில் விளையாடவிருக்கிறது.
இந்நிலையில் இந்த தொடரில் இடம்பெற்றுள்ள 08 அணிகளும் தங்களுடைய 15 பேர் கொண்ட அணியை எதிர்வரும் 12ஆம் திகதிக்குள் தெரிவிக்க வேண்டும் என தகவல் வெளியாகியுள்ளது. இதில் வீரர்கள் உபாதை காரணமாக விலகினால் மாற்றம் செய்து கொள்ளலாம்.
வீரர்களை மாற்ற பெப்ரவரி 13ஆம் திகதிவரை அனுமதி உள்ளது. இதுவரையில் இங்கிலாந்து மட்டுமே இந்த தொடருக்கான அணியை அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.