NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

சருமத்தை வெண்மையாக்கும் கிரீம்களை தவிர்க்குமாறு அறிவுறுத்தல்!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

நாட்டில் மக்கள் மத்தியில் தோல் புற்றுநோயின் தாக்கம் அதிகரித்துள்ளதாக சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.

சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் இன்று (14) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட தோல் நோய் வைத்திய நிபுணர் வைத்தியர் ஸ்ரீயானி சமரவீர, இயற்கையான சருமத்தைப் பாதுகாத்து ஆரோக்கியமாக வைத்திருப்பது மிகவும் அவசியமானது எனத் தெரிவித்தார்.

இதற்கிடையில், சில பெண்களின் மனப்பான்மை பிரச்சினைகளால், சரியான ஆராய்ச்சியின்றி, சருமத்தை வெண்மையாக்கும் கிரீம்களைப் பயன்படுத்தத் தூண்டப்படுகிறார்கள் என சுட்டிக்காட்டினார்.

Share:

Related Articles