NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

சர்வதேச கிரிக்கெட்டில் சாதனை படைத்த ரபாடா!

இந்தியாவுக்கு எதிராக செஞ்சூரியனில் நடைபெறும் முதலாவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் தென் ஆபிரிக்க வீரரான ரபாடா சர்வதேச கிரிக்கெட்டில் 500 விக்கெட்களை வீழ்த்தி அசத்தியுள்ளார்.

இந்திய கேப்டன் ரோகித் சர்மா, அதிரடி ஆட்டக்காரர் விராட் கோலி, மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஸ்ரேயஸ் ஐயர், சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் , வேகப்பந்து வீச்சாளர் ஷ்ர்துல் தகூர் என 5 முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

ஷால் பொலக் (823), டேல் ஸ்டெயின் (697), மக்காயா எண்டினி (661), ஆலன் டொனால்ட் (602), ஜாக் காலிஸ் (572),,மோர்னே மோர்கெல் (535) ஆகியோர் 500 விக்கெட்டுகளை சர்வதேச போட்டிகளில் கைப்பற்றிய தென்னாப்பிரிக்க வீரர்களாவர். இவர்களுக்கு அடுத்து இந்த வரிசையில் ரபாடா இணைந்துள்ளார்.

ரபாடா டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டும் 5 விக்கெட்டுகளை 14 முறையும், 10 விக்கெட்டுகளை 4 முறையும் வீழ்த்தியுள்ளார். இதுமட்டும் இல்லாமல் ஒருநாள் கிரிக்கெட்டில் இரண்டுமுறை 5 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார். 

Share:

Related Articles