NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

சர்வதேச நாணய நிதியத்தின் வருடாந்த பொதுக் கூட்டம் இன்று!

சர்வதேச நாணய நிதியத்தின் வருடாந்த பொதுக் கூட்டம் இன்று மொரோக்கோவின் மராகேச்சில் ஆரம்பமாகவுள்ளது.

இந்த கூட்டத்தில் நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க, நிதியமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன, மற்றும் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க உள்ளிட்ட குழுவினர் இலங்கை சார்பில் பங்கேற்கவுள்ளனர்.

2024ம் ஆண்டு இலங்கை பொருளாதார வளர்ச்சி நோக்கி நகர்வதை உறுதி செய்வதற்காக சர்வதேச நம்பிக்கையை மேம்படுத்துவதற்கான சிறந்த வாய்ப்பு இதுவாகும் என நிதி இராஜங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் வருடாந்த மாநாட்டில் சர்வதேச நம்பிக்கையை இலங்கையால் மேலும் உறுதிப்படுத்த முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் 15ஆம் திகதி வரை இடம்பெறவுள்ள இந்த மாநாட்டில் பல நாடுகளின் தலைவர்கள், நிதியமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.

Share:

Related Articles