NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

சர்வதேச போட்டிகளில் பங்குபற்றி நாடு திரும்பாமல் இருக்கும் வீர, வீராங்கனைகளுக்கு எச்சரிக்கை!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

சர்வதேச போட்டிகளில் பங்குபற்றும் விளையாட்டு வீர, வீராங்கனைகள் போட்டிகள் நிறைவடைந்ததன் பின்னர் நாடு திரும்பாமல் இருப்பதை குறைக்கும் வகையில் விதிகள் கடுமையாக்கப்படும் என தேசிய விளையாட்டு சபையின் தலைவர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

அத்துடன், முன்னர் அறவிடப்பட்ட 5 இலட்சம் ரூபாய் பிணைப் பத்திரம் 10 இலட்சம் ரூபாவாக அதிகரிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆசிய விளையாட்டுப் போட்டியில் வீர, வீராங்கனைகள் 100 பேரும் 55 அதிகாரிகளும் பங்குபற்றவுள்ளனர்.

இதில் சில விளையாட்டு வீர, வீராங்கனைகள் பதக்கம் வெல்வதற்குரிய வாய்ப்பு உள்ளது. நிதி நெருக்கடி காரணமாக விளையாட்டு வீர, வீராங்கனைகளின் எண்ணிக்கையை மட்டுப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஆசிய விளையாட்டு விழாவில் பங்கேற்கவுள்ள 55 அதிகாரிகளின் விபரக்கோவை சரிபார்க்கப்பட்டு, அவர்களின் தகுதி மற்றும் அவர்களது பங்கேற்பு அவசியமனதா எனவும் ஆராயப்படும்.

சர்வதேச போட்டிகளில் பங்குபற்றுவதற்காக வெளிநாடு செல்லும் வீர, வீராங்கனைகள் சிலர் நாடு திரும்பாத நிலை அதிகரித்து வருவதால், எதிர்காலத்தில் விளையாட்டு வீர, வீராங்கனைகளுக்கு வீசா பெறுவதில் சிரமத்தை எதிர்நோக்க நேரிடும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Share:

Related Articles